தொடர்புடைய கட்டுரைக்கு [இங்கே] சொடுக்கவும். மிக அருமையான விவரணை, தவறாமல் படிக்கவும்.
Saturday, December 6, 2008
Saturday, November 15, 2008
சட்டம்?
என்ன காரணத்துக்காக சண்டை நடந்தது என்பது இப்போதைக்கு தேவையில்லாத விஷயம். ”ஒருவன் செய்தால் குற்றம், நூறுபேர் செய்தால் கலவரம்” என்று பழைய எஸ்.ஏ. சந்திரசேகர் படத்தில் ஒரு வசனம் கேட்டதாய் ஞாபகம். அது தான் இங்கேயும் நடந்திருக்கிறது, அவ்வளவும் வீடியோ ஆதாரங்களுடன்! அந்த ஆதாரங்களின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இருபத்தி ஐந்து தனிப்படைகள் தேடிக் கொண்டிருக்கிறது. அடித்தவர்கள் குற்றவாளிகள், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் அதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால் அடிபட்டு மருத்துவமணையில் இருப்பதாலேயே அடிபட்டவர்கள் யோக்கியர்கள் என்றாகிவிடாது. வழக்குப் போடுவதாக இருந்தால் அவர்கள் மீதும் போட வேண்டும்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்துக்கு வெறும் வார்த்தை அளவில் ஆதரவு தெரிவித்ததற்கே வை.கோ., சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்ட போது, கொலைவெறியோடு கையில் ஆயுதங்களுடன் அலைந்த இவர்களும் கைது செய்யப்பட வேண்டுமா, இல்லையா?
இந்த நாட்டில் பாஸ்போர்ட் வேண்டி ஒருவர் விண்ணப்பித்தால், அவருடைய குற்றப்பின்னணி என்ன என்பது விசாரித்து அறியப்படாமல் அவருக்குப் பாஸ்போர்ட் வழங்கப்படுவதில்லை. நாட்டை விட்டு வெளியே போகிற ஒருவனுடைய குற்றப்பின்னணியே விசாரிக்கப்படும்போது, நாட்டின் நீதி பரிபாலனத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் தகுதியுடன் கல்லூரியை விட்டு வெளியே வரும் புதிய வழக்கறிஞர்களின் குற்றப்பின்னணியும் அவர்கள் பணியில் சேருவதற்கு முன்பு விசாரித்து அறியப்பட வேண்டும். அப்படி குற்றப் பின்னணி உள்ளவர்களாக இருந்தால், நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர் பதவிகளுக்கு அதை ஒரு தகுதி இழப்பாகக் கருத வேண்டும். குறைந்தபட்சம் சட்ட மாணவர்கள் இதை எண்ணியாவது அடக்கி வாசிக்கலாம்.
இவ்விவகாரம் ஆளுங்கட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் நோக்கிலேயே ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படுவதாகத் தோண்றுகிறது. காவல் துறை இவ்விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருந்தால், இதே உடகங்கள் இவ்விவகாரத்தை “போலீஸ் அராஜகம்” என்று சொல்லியிருக்கும். இவர்களுக்குத் தேவை செய்தி, அதற்கு எவன் செத்தாலும், யார் யாரை சாகடித்தாலும் இவர்களுக்கு அதைக் குறித்து எந்தக் கவலையும் இருக்கப்போவதில்லை. இப்படிச் சொல்வதாலேயே காவல் துறை நடந்துகொண்ட விதம் சரி என்று சொல்ல வரவில்லை. முன்னரே தகவல் கிடைத்தும் காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்காததும் கண்டணத்திற்குரியதே.இவ்விவகாரத்தைக் காரணம் காட்டி இன்று நீதிமன்றங்களைப் புறக்கணித்த வழக்கறிஞர்களின் செயலும் பொறுப்பற்றதே.
Saturday, October 4, 2008
சுடோகு
[மேலும் படிக்க]
Friday, September 26, 2008
போதும்டா சாமி அல்லது டேய் நாராயணா - 2
2. கடப்பாறை வயிற்றில் இறங்கி முதுகு வழியாக வெளியே வந்த பிறகும் குத்துபட்ட ஹீரோ உயிர் பிழைத்து வருவது...
3. ஹீரோ மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட உடன் மக்கள் பக்கத்து மாநிலத்திலிருந்து கூட லாரி லாரியாகத் திரண்டு வருவது...
4. ஹீரோ நாற்பத்தைந்து வயதைத் தாண்டிய தோற்றத்துடன் இருந்தாலும் திருமணமாகாதவராகக் காட்டுவது...
5. ஹீரோ சொந்த ஊரிலிருந்து நகரத்துக்கு வரும்போது அங்கே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதும், அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஹீரோ முடிவெடுப்பதும்...
6. படம் வெளி மாநிலத்தில் நடந்தாலும் அந்த ஊர்க் கதாபாத்திரங்கள் கூட அட்சர சுத்தமாக தமிழ் பேசுவது (இரண்டொரு வார்த்தைகள் மட்டும் அந்த மாநில மொழியில்)...
7. ஆந்திராவில் நடக்கும் கதையில் தமிழ்க் குடும்பத்துப் பெண் கேரள பாணியில் சேலை கட்டியிருப்பது (எப்படி என்று விரிவாகச் சொன்னால் செருப்பும் துடைப்பமும் என் வீடு தேடி வரும், பரவாயில்லையா?)...
8. தாதா மகா மட்டமானவன் என்று காட்டுவதற்கு கோயில் ஆரத்தியில் சிகரெட் பற்றவைப்பது போல் கட்டுவது...
9. கோயிலில் சாமிக்கு உச்சக்கட்டத்தில் பூஜை நடக்கும்போது ஹீரோவுக்கு வெறி ஏறுவதும், ஹீரோ வில்லனைக் குத்திக் கொன்றதும் பாலபிஷேகம் செய்து அவரது உக்கிரத்தைத் தணிப்பதும்…
10. ஹீரோ கோவப்படும்போது மெட்ராஸ் ஐ வந்த மாதிரி கண் சிவப்பது…
இது அத்தனையும் இந்த ஞாயிறு (22-9-08) மாலை நான் பார்த்த ஒரே சினிமாவில் வந்த கேடு கெட்ட அபத்தங்கள். உக்காந்து பாத்த என்னை எதக் கொண்டு அடிக்கலாம்னு யோசிக்கிறீங்களா? யோசிங்க யோசிங்க… என்னது, படம் பேரு என்னன்னு சொல்லனுமா? அத என் வாயால சொல்ல மாட்டேன். படத்தப் பாத்துட்டு நான் மனசுல என்ன நெனச்சேன்னு வேணும்னா சொல்றேன். ”ஏண்டா யானைக்கு வைக்கிற பேர ஒரு கே*** வைச்சு அத சினிமாவா எடுத்துக் கொடுமைப் படுத்துறீங்க…”
Monday, September 22, 2008
கு(வெ)றுங்கதைகள் ஐந்து
குறுங்கதைகள் ஐந்து என்ற தலைப்பில் ஐந்து குறுங்கதைகளை எழுதியிருக்கிறேன். இக்கதைகளை எழுதுவதற்கு லதனாந்த் அங்கிள் அவர்கள் வழ்க்கமாக பயண்படுத்துகிற ஒரு உத்தியை நானும் பயன்படுத்தியுள்ளேன். அங்கிளுக்கு இந்த இடத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அங்கிள் வழக்கமாக கதையின் கடைசியில் ஒரு ட்விஸ்ட் வைப்பார். அதே உத்தியுடன் நாமும் ஒரு கதை எழுதலாம் என்று தோன்றியது. அங்கிள் எழுதுகிற அதே சிறுகதை வடிவத்தில் எழுதினால் வேறுபாடு இருக்காது என்பதால் இன்னும் சவாலாக ஏதாவது செய்ய வேண்டுமே என்று விரும்பினேன். அதனால் தான் இந்தக் குறுங்கதை வடிவம்.
குறுங்கதை என்ற உடன் உங்களுக்ககே புரிந்திருக்கும். ஆம், ஒவ்வொரு கதையும் இரண்டு அல்லது மூண்று பத்திகளுக்குள் முடிந்துவிடும். இவ்வளவு குருகிய கதையின் முடிவில் ஒரு ட்விஸ்ட் வைப்பது உண்மையிலேயே சவாலாக இருந்தது.
கதையைக் குறித்து உங்களது கருத்துக்களை வேர்ட்பிரஸ் தளத்தில் பதிவின் கீழே எழுதவும். நன்றி.
[பதிவைப் படிக்க]Sunday, September 14, 2008
பார்த்தேன், சிந்தித்தேன் - II
வணக்கம் மக்களே
Sunday, August 10, 2008
டேய் நாராயணா....
நல்ல வேள நம்ம கேப்10 தமிழ்ப் படத்துல நடிக்கிறதோட நிறுத்திக்கிட்டாரு. அவரோட படத்த மத்த மொழிகள்ள டப்பிங் பண்றதோட நிறுத்திக்கிட்டாங்க. ரமணா மாதிரி முக்கியமான படங்கள அங்க உள்ள முக்கியஸ்தருங்கள வச்சு ரீமேக் பண்ணிடுறாங்க. யோசிச்சுப் பாருங்க, கேப்10ன வச்சு நேரடியா ஒரு தெலுங்கு படம் எடுத்தா எப்படி இருக்கும்?
”ரேய், ஆந்த்ராலொ மொத்தம் ரெண்டு லக்ஷம் பஸ்சுலு உன்னேயி. தாண்ட்லோ, டெப்பை ஐது வெய்யா நாலு ஒந்தா யாபை ஆறு (75,456) டவுன் பஸ்சுலு, முப்பை ஐது வெய்யா மூடு ஒந்தா இரவை எனிமிதி (35,328) டீலக்ஸ் பஸ்சுலு, பதஹாரு வெய்யா எனிமிதி ஒந்தா பத்னாலுகு (16,814 ஏசி வோல்வோ பஸ்சுலு....
அய்யய்யோ... கற்பன பண்ணவே பயமா இருக்கே...
கேப்10 கொடுமையாவது பரவாயில்லை, நம்ம லதிமுக தலைவரோட டார்ச்சரத் தான் தாங்க முடியல. எவனோ ஒருத்தன் ரோட்ல ஒன்னுக்கிருந்தான்னு அவன் டிக்கில நம்ம டி.ஆர் ஒன்னுக்கிருக்குறதும், ஃபுல் சூட்ல மும்தாஜ் கூட டான்ஸ் ஆடுறதும் தாங்க முடியலடா சாமி. ஆமா, இவருதான் ஹீரோயினிய தொடவே மாட்டாரே, அப்புறம் எதுக்கு இவரு மும்தாஜ் கூட ஆடனும், சரோஜா தேவி, பானுமதி மாதிரி சீனியர் நடிகைங்க போதாதா? இவரு கூட நடிக்க அவுங்களுக்கு இஷ்டமிருக்கோ இல்லையோ, யாரு கண்டா...
இவர வச்சு காவிரி பிரச்சனைலயும், முல்லைப் பெரியாறு விவகாரத்துலயும் நம்மள ஏச்சுக்கிட்டு இருக்கற பக்கத்து ஸ்டேட்காரனுங்கள பழிவாங்கலாம்னு பாத்தா அத்தன பேரும் வெவரமா எஸ்கேப் ஆயிடுறானுங்க. எவனும் இவரு படத்த டப்பிங்கும் பண்ண மாட்டேங்குறானுங்க ரீமேக்கும் பண்ண மாட்டேங்குறானுங்களே. யாம் பட்ட துன்பம் படுக பக்கத்து ஸ்டேட் படுபாவிகள்னு சந்தோஷப்படலாம்னு நெனச்சா நடக்காம போயிருச்சே...
ஆனா நம்ம டி.ஆர் மட்டும் ஆந்திரா பக்கம் வந்தா அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.
”நேனு தீஸ்கொஸ்தான்றா பண்டி
மீரு அந்தரு தாண்ட்லோ ரண்டி”
இது மாதிரி ஒரு பத்து இருவது ஐட்டத்த எடுத்து உட்டார்னா, பாலகிருஷ்னா, சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர். எல்லாம் வேற ஸ்டேட்டுக்கு டிக்கெட் எடுத்துருவாங்க.
ஆனா அதுல ஒரு கொடுமை என்னன்னா, அவரோட படம் பூரா ஹவுஸ்புல்லா ஓடும். ரஜினிகாந்து, கமலஹாசன் இவுங்கள மாதிரி துக்கடா ஏக்டருங்க படமெல்லாம் ரிலீஸ் பண்ண தியேட்டர் இல்லாம தெணறும்...
தயவு செஞ்சு இந்த தமிழகத்து விடிவெள்ளிய தமிழ்நாட்டுலயே வச்சுக்குங்கடா சாமிகளா... அப்புறம் கன்னடத்த செம்மொழி ஆக்க விடமாட்டேங்கறோம்னு சொல்லி பஸ்ஸ எரிச்சவனுங்க, நாம அவனுங்கள திட்டமிட்டுப் பழிவாங்குறோம்னு நெனச்சு தமிழ்நாட்டு மேல அனுகுண்டப் போட்டாலும் போட்ருவானுங்கடா. லூசுப் பசங்கடா அவனுங்க...
Wednesday, August 6, 2008
திமுக எப்படி இன்னும் காங்கிரஸ் கூட்டணியில்?
குறிச்சொற்கள் அரசியல், திமுக, பிருந்தா காரத், மார்க்சிஸ்டுகள்
சேது சமுத்திரத் திட்டத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் காங்கிரசுடன் திமுக எப்படிக் கூட்டணியில் இருக்கலாம்?
பிருந்தா காரத் கேள்வி (சன் செய்திகள்)
Thursday, July 31, 2008
ரஜினியின் இன்றைய ரிலீஸ்
குறிச்சொற்கள் கர்நாடகா, குசேலன், செருப்பு, துடைப்பம், மன்னிப்பு, ரஜினி, வருத்தம்