Saturday, December 6, 2008

உச்சம்...

uchcham_1

 

தொடர்புடைய கட்டுரைக்கு [இங்கே] சொடுக்கவும். மிக அருமையான விவரணை, தவறாமல் படிக்கவும்.

Saturday, November 15, 2008

சட்டம்?

தற்போது பதிவுலகம் முழுவதும் பரபரப்பாக அலசப்பட்டு வரும் விஷயம் சட்டக்கல்லூரி மாணவர் விவகாரம். வேண்டிய மட்டும் அணைவரும் கருத்து சொல்லியாயிற்று. அதானால் நானும் இதில் மூக்கை நுழைக்கப் போவதில்லை.

என்ன காரணத்துக்காக சண்டை நடந்தது என்பது இப்போதைக்கு தேவையில்லாத விஷயம். ”ஒருவன் செய்தால் குற்றம், நூறுபேர் செய்தால் கலவரம்” என்று பழைய எஸ்.ஏ. சந்திரசேகர் படத்தில் ஒரு வசனம் கேட்டதாய் ஞாபகம். அது தான் இங்கேயும் நடந்திருக்கிறது, அவ்வளவும் வீடியோ ஆதாரங்களுடன்! அந்த ஆதாரங்களின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இருபத்தி ஐந்து தனிப்படைகள் தேடிக் கொண்டிருக்கிறது. அடித்தவர்கள் குற்றவாளிகள், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் அதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால் அடிபட்டு மருத்துவமணையில் இருப்பதாலேயே அடிபட்டவர்கள் யோக்கியர்கள் என்றாகிவிடாது. வழக்குப் போடுவதாக இருந்தால் அவர்கள் மீதும் போட வேண்டும்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்துக்கு வெறும் வார்த்தை அளவில் ஆதரவு தெரிவித்ததற்கே வை.கோ., சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்ட போது, கொலைவெறியோடு கையில் ஆயுதங்களுடன் அலைந்த இவர்களும் கைது செய்யப்பட வேண்டுமா, இல்லையா?

இந்த நாட்டில் பாஸ்போர்ட் வேண்டி ஒருவர் விண்ணப்பித்தால், அவருடைய குற்றப்பின்னணி என்ன என்பது விசாரித்து அறியப்படாமல் அவருக்குப் பாஸ்போர்ட் வழங்கப்படுவதில்லை. நாட்டை விட்டு வெளியே போகிற ஒருவனுடைய குற்றப்பின்னணியே விசாரிக்கப்படும்போது, நாட்டின் நீதி பரிபாலனத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் தகுதியுடன் கல்லூரியை விட்டு வெளியே வரும் புதிய வழக்கறிஞர்களின் குற்றப்பின்னணியும் அவர்கள் பணியில் சேருவதற்கு முன்பு விசாரித்து அறியப்பட வேண்டும். அப்படி குற்றப் பின்னணி உள்ளவர்களாக இருந்தால், நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர் பதவிகளுக்கு அதை ஒரு தகுதி இழப்பாகக் கருத வேண்டும். குறைந்தபட்சம் சட்ட மாணவர்கள் இதை எண்ணியாவது அடக்கி வாசிக்கலாம்.

இவ்விவகாரம் ஆளுங்கட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் நோக்கிலேயே ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படுவதாகத் தோண்றுகிறது. காவல் துறை இவ்விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருந்தால், இதே உடகங்கள் இவ்விவகாரத்தை “போலீஸ் அராஜகம்” என்று சொல்லியிருக்கும். இவர்களுக்குத் தேவை செய்தி, அதற்கு எவன் செத்தாலும், யார் யாரை சாகடித்தாலும் இவர்களுக்கு அதைக் குறித்து எந்தக் கவலையும் இருக்கப்போவதில்லை. இப்படிச் சொல்வதாலேயே காவல் துறை நடந்துகொண்ட விதம் சரி என்று சொல்ல வரவில்லை. முன்னரே தகவல் கிடைத்தும் காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்காததும் கண்டணத்திற்குரியதே.இவ்விவகாரத்தைக் காரணம் காட்டி இன்று நீதிமன்றங்களைப் புறக்கணித்த வழக்கறிஞர்களின் செயலும் பொறுப்பற்றதே.

Saturday, October 4, 2008

சுடோகு

பெரும்பாலான நாளேடுகள் இப்போதெல்லாம் சுடோகு இல்லமல் வருவதில்லை. இந்தப் பதிவில் நான் சுடோகுவின் வரலாற்றைப் பற்றி சொல்லப் போவதில்லை. சுடோகு என்னை எப்படியெல்லாம் படுத்தியது என்பதைப் பற்றித் தான் சொல்லப் போகிறேன்.

[மேலும் படிக்க]

Friday, September 26, 2008

போதும்டா சாமி அல்லது டேய் நாராயணா - 2

1. அதிர்ச்சியான சம்பவமொன்றில் பறிபோன சுய நினைவு உருட்டுக் கட்டையால் அடித்த உடன் திரும்புவது...

2. கடப்பாறை வயிற்றில் இறங்கி முதுகு வழியாக வெளியே வந்த பிறகும் குத்துபட்ட ஹீரோ உயிர் பிழைத்து வருவது...

3. ஹீரோ மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட உடன் மக்கள் பக்கத்து மாநிலத்திலிருந்து கூட லாரி லாரியாகத் திரண்டு வருவது...

4. ஹீரோ நாற்பத்தைந்து வயதைத் தாண்டிய தோற்றத்துடன் இருந்தாலும் திருமணமாகாதவராகக் காட்டுவது...

5. ஹீரோ சொந்த ஊரிலிருந்து நகரத்துக்கு வரும்போது அங்கே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதும், அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஹீரோ முடிவெடுப்பதும்...

6. படம் வெளி மாநிலத்தில் நடந்தாலும் அந்த ஊர்க் கதாபாத்திரங்கள் கூட அட்சர சுத்தமாக தமிழ் பேசுவது (இரண்டொரு வார்த்தைகள் மட்டும் அந்த மாநில மொழியில்)...

7. ஆந்திராவில் நடக்கும் கதையில் தமிழ்க் குடும்பத்துப் பெண் கேரள பாணியில் சேலை கட்டியிருப்பது (எப்படி என்று விரிவாகச் சொன்னால் செருப்பும் துடைப்பமும் என் வீடு தேடி வரும், பரவாயில்லையா?)...

8. தாதா மகா மட்டமானவன் என்று காட்டுவதற்கு கோயில் ஆரத்தியில் சிகரெட் பற்றவைப்பது போல் கட்டுவது...

9. கோயிலில் சாமிக்கு உச்சக்கட்டத்தில் பூஜை நடக்கும்போது ஹீரோவுக்கு வெறி ஏறுவதும், ஹீரோ வில்லனைக் குத்திக் கொன்றதும் பாலபிஷேகம் செய்து அவரது உக்கிரத்தைத் தணிப்பதும்…

10. ஹீரோ கோவப்படும்போது மெட்ராஸ் ஐ வந்த மாதிரி கண் சிவப்பது…


இது அத்தனையும் இந்த ஞாயிறு (22-9-08) மாலை நான் பார்த்த ஒரே சினிமாவில் வந்த கேடு கெட்ட அபத்தங்கள். உக்காந்து பாத்த என்னை எதக் கொண்டு அடிக்கலாம்னு யோசிக்கிறீங்களா? யோசிங்க யோசிங்க… என்னது, படம் பேரு என்னன்னு சொல்லனுமா? அத என் வாயால சொல்ல மாட்டேன். படத்தப் பாத்துட்டு நான் மனசுல என்ன நெனச்சேன்னு வேணும்னா சொல்றேன். ”ஏண்டா யானைக்கு வைக்கிற பேர ஒரு கே*** வைச்சு அத சினிமாவா எடுத்துக் கொடுமைப் படுத்துறீங்க…”

Monday, September 22, 2008

கு(வெ)றுங்கதைகள் ஐந்து

குறுங்கதைகள் ஐந்து என்ற தலைப்பில் ஐந்து குறுங்கதைகளை எழுதியிருக்கிறேன். இக்கதைகளை எழுதுவதற்கு லதனாந்த் அங்கிள் அவர்கள் வழ்க்கமாக பயண்படுத்துகிற ஒரு உத்தியை நானும் பயன்படுத்தியுள்ளேன். அங்கிளுக்கு இந்த இடத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அங்கிள் வழக்கமாக கதையின் கடைசியில் ஒரு ட்விஸ்ட் வைப்பார். அதே உத்தியுடன் நாமும் ஒரு கதை எழுதலாம் என்று தோன்றியது. அங்கிள் எழுதுகிற அதே சிறுகதை வடிவத்தில் எழுதினால் வேறுபாடு இருக்காது என்பதால் இன்னும் சவாலாக ஏதாவது செய்ய வேண்டுமே என்று விரும்பினேன். அதனால் தான் இந்தக் குறுங்கதை வடிவம்.

குறுங்கதை என்ற உடன் உங்களுக்ககே புரிந்திருக்கும். ஆம், ஒவ்வொரு கதையும் இரண்டு அல்லது மூண்று பத்திகளுக்குள் முடிந்துவிடும். இவ்வளவு குருகிய கதையின் முடிவில் ஒரு ட்விஸ்ட் வைப்பது உண்மையிலேயே சவாலாக இருந்தது.

கதையைக் குறித்து உங்களது கருத்துக்களை வேர்ட்பிரஸ் தளத்தில் பதிவின் கீழே எழுதவும். நன்றி.

[பதிவைப் படிக்க]

Sunday, September 14, 2008

பார்த்தேன், சிந்தித்தேன் - II

ஊருக்குத் திரும்பும் போது சென்னையில் கண்ட இரு விளம்பரங்கள் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. இப்போது முதல் விளம்பரத்தைப் பற்றிப் பார்ப்போம். கோயம்பேட்டிலிருந்து வடபழனி செல்லும் வழியில் ஒரு பிரம்மாண்டமான விளம்பரத் தட்டியில் (ப்ளெக்ஸ் போர்டில்) சில செய்தித்தாள் துண்டுகள் (நியூஸ் பேப்பர் கட்டிங்குகள்) இருந்தன. அவை ஐம்பத்தைந்து வயதில் இரட்டைக் குழந்தையைப் பிரசவித்த ஒரு பெண்மணியைப் பற்றிய [மேலும் படிக்க]

வணக்கம் மக்களே

ஏறக்குறைய ஒரு மாதமாகக் காணாமல் போனவர்கள் பட்டியலில் இருந்து, இப்போது திரும்பி வந்திருக்கிறேன். இது வரை பிறந்தநாள் மட்டுமே எனக்கே எனக்கானதாக இருந்தது. வரும் ஆண்டு முதல் இன்னொரு நாளையும் அதனுடன் சேர்த்துக் [மேலும் படிக்க]

Sunday, August 10, 2008

டேய் நாராயணா....

வீடு தேடி வந்து கொடுமைப் படுத்துறானுங்களேடா நாராயணா... ஏன்டா சன் டிவிக்கார புண்ணியவானுங்களா ஒங்க தொல்லைக்கு ஒரு அளவே இல்லையா... வியாழக் கெழம தானடா வீராசாமி படம் போட்டீங்க... அப்புறம் எதுக்குடா ஞாயித்துக் கெழம வாஞ்சிநாதன் போடுறீங்க... போடுறது தான் போடுறீங்க, பகல் நேரத்துல போடக் கூடாதாடா... ஏன்டா ராத்திரி நேரத்துல போட்டு சின்னப் புள்ளைங்கள பயமுறுத்துறீங்க...

நல்ல வேள நம்ம கேப்10 தமிழ்ப் படத்துல நடிக்கிறதோட நிறுத்திக்கிட்டாரு. அவரோட படத்த மத்த மொழிகள்ள டப்பிங் பண்றதோட நிறுத்திக்கிட்டாங்க. ரமணா மாதிரி முக்கியமான படங்கள அங்க உள்ள முக்கியஸ்தருங்கள வச்சு ரீமேக் பண்ணிடுறாங்க. யோசிச்சுப் பாருங்க, கேப்10ன வச்சு நேரடியா ஒரு தெலுங்கு படம் எடுத்தா எப்படி இருக்கும்?

”ரேய், ஆந்த்ராலொ மொத்தம் ரெண்டு லக்‌ஷம் பஸ்சுலு உன்னேயி. தாண்ட்லோ, டெப்பை ஐது வெய்யா நாலு ஒந்தா யாபை ஆறு (75,456) டவுன் பஸ்சுலு, முப்பை ஐது வெய்யா மூடு ஒந்தா இரவை எனிமிதி (35,328) டீலக்ஸ் பஸ்சுலு, பதஹாரு வெய்யா எனிமிதி ஒந்தா பத்னாலுகு (16,814 ஏசி வோல்வோ பஸ்சுலு....

அய்யய்யோ... கற்பன பண்ணவே பயமா இருக்கே...

கேப்10 கொடுமையாவது பரவாயில்லை, நம்ம லதிமுக தலைவரோட டார்ச்சரத் தான் தாங்க முடியல. எவனோ ஒருத்தன் ரோட்ல ஒன்னுக்கிருந்தான்னு அவன் டிக்கில நம்ம டி.ஆர் ஒன்னுக்கிருக்குறதும், ஃபுல் சூட்ல மும்தாஜ் கூட டான்ஸ் ஆடுறதும் தாங்க முடியலடா சாமி. ஆமா, இவருதான் ஹீரோயினிய தொடவே மாட்டாரே, அப்புறம் எதுக்கு இவரு மும்தாஜ் கூட ஆடனும், சரோஜா தேவி, பானுமதி மாதிரி சீனியர் நடிகைங்க போதாதா? இவரு கூட நடிக்க அவுங்களுக்கு இஷ்டமிருக்கோ இல்லையோ, யாரு கண்டா...

இவர வச்சு காவிரி பிரச்சனைலயும், முல்லைப் பெரியாறு விவகாரத்துலயும் நம்மள ஏச்சுக்கிட்டு இருக்கற பக்கத்து ஸ்டேட்காரனுங்கள பழிவாங்கலாம்னு பாத்தா அத்தன பேரும் வெவரமா எஸ்கேப் ஆயிடுறானுங்க. எவனும் இவரு படத்த டப்பிங்கும் பண்ண மாட்டேங்குறானுங்க ரீமேக்கும் பண்ண மாட்டேங்குறானுங்களே. யாம் பட்ட துன்பம் படுக பக்கத்து ஸ்டேட் படுபாவிகள்னு சந்தோஷப்படலாம்னு நெனச்சா நடக்காம போயிருச்சே...

ஆனா நம்ம டி.ஆர் மட்டும் ஆந்திரா பக்கம் வந்தா அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.

”நேனு தீஸ்கொஸ்தான்றா பண்டி
மீரு அந்தரு தாண்ட்லோ ரண்டி”

இது மாதிரி ஒரு பத்து இருவது ஐட்டத்த எடுத்து உட்டார்னா, பாலகிருஷ்னா, சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர். எல்லாம் வேற ஸ்டேட்டுக்கு டிக்கெட் எடுத்துருவாங்க.

ஆனா அதுல ஒரு கொடுமை என்னன்னா, அவரோட படம் பூரா ஹவுஸ்புல்லா ஓடும். ரஜினிகாந்து, கமலஹாசன் இவுங்கள மாதிரி துக்கடா ஏக்டருங்க படமெல்லாம் ரிலீஸ் பண்ண தியேட்டர் இல்லாம தெணறும்...

தயவு செஞ்சு இந்த தமிழகத்து விடிவெள்ளிய தமிழ்நாட்டுலயே வச்சுக்குங்கடா சாமிகளா... அப்புறம் கன்னடத்த செம்மொழி ஆக்க விடமாட்டேங்கறோம்னு சொல்லி பஸ்ஸ எரிச்சவனுங்க, நாம அவனுங்கள திட்டமிட்டுப் பழிவாங்குறோம்னு நெனச்சு தமிழ்நாட்டு மேல அனுகுண்டப் போட்டாலும் போட்ருவானுங்கடா. லூசுப் பசங்கடா அவனுங்க...

Wednesday, August 6, 2008

திமுக எப்படி இன்னும் காங்கிரஸ் கூட்டணியில்?

சேது சமுத்திரத் திட்டத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் காங்கிரசுடன் திமுக எப்படிக் கூட்டணியில் இருக்கலாம்?

பிருந்தா காரத் கேள்வி (சன் செய்திகள்)


[மேலும் படிக்க]

Thursday, July 31, 2008

ரஜினியின் இன்றைய ரிலீஸ்

ரஜினியின் அடுத்த படத்துக்கு பஞ்ச் டயலாக் எழுதும் அரிய வாய்ப்பு. மேலும் விபரங்களுக்கு [சொடுக்குக]

Sunday, July 27, 2008

அறை எண் 123ல் அமெரிக்கா…

பெங்களூரு மற்றும் அகமதாபாத் குண்டு வெடிப்புகளை டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கண்டித்து அறிக்கை விட்டுள்ளதாம். இதைக் கேள்விப்படும்போது எதால் சிரிப்பது என்று தெரியவில்லை. அமெரிக்காவுக்கு இவ்வளவு நாளும் இல்லாமல் [மேலும் படிக்க]

Monday, July 21, 2008

பார்த்தேன், சிந்தித்தேன் - I

வழக்கமாகச் சேனலுக்குச் சேனல் தாவுகிற நான் ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவறாமல் பார்ப்பதுண்டு. அப்படி ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியின் நீயா நானா. சில முறை அலர்ட் வைத்து இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தாலும் விளம்பர இடைவேளைகளில் சேனலை மாற்றிவிட்டு இந்த நிகழ்ச்சியைத் தவறவிட்டதும் உண்டு. ஆனால் இன்றைக்கு எடுத்துக் கொண்ட விஷயம் அதி முக்கியமான விஷயம் என்பதால் [மேலும் படிக்க]

Friday, July 18, 2008

எனக்கு மட்டும் ஏன் இப்படி? - III

சில நேரத்துல ஏந்தான் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குதுன்னு என்னை நெனச்சு நானே வருத்தப்படுறதுண்டு. காலம் பின்னாடி ஒனக்கு வட்டியும் மொதலுமா சேத்து வச்சுத் தரும்டான்னு என்னை நானே சமாதானம் பண்ணிக்குவேன். சனியனே, எதுக்குடா இந்த பில்டப்புன்னு குறுக்க புகுந்து லந்தக் குடுத்தா என்னோட [மேலும் படிக்க]

Friday, July 11, 2008

சரியா? தவறா?

பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

Sunday, July 6, 2008

கொலை வெறிக் கவிதைகள் 1754 - 3

கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

Saturday, July 5, 2008

கொலை வெறிக் கவிதைகள் 1754 - 2

இடுகையைப் படிக்க இங்கே அழுத்தவும்.

உலக நாயகனே - லிரிக்ஸ் ரீமிக்ஸ்

Come blog with me before you go… (2)


பதிவு உலகிலே உன்னை வென்றிட யாரு...
கொங்கு நாட்டிலே உன்னை மிஞ்சிட யாரு... (2)


பதிவு நாயகனே (2)
ப்ளாகரும் கண்டு வியக்கும்
இனி
வேர்ட் பிரஸ்சும் உன்னை அழைக்கும்...


நீ ஒரு ரேஞ்சர், வம்புக்கு வந்தா டேஞ்சர்
நடுக்காட்டில் லேப்டாப்பில் பதிவெழுதும் ப்ளாகர் (2)


ஒரு ப்ளாக் தொடங்கி இரண்டே மாதத்தில்
ஆயிரம் மாப்பிள்ளை கண்டாய்
உன் ப்ளாகில்
ஆறாயிரம் ஹிட்டும் கண்டாய்


வேலைகள் உன்னை சூழ்ந்து நின்றாலும்
எழுதுவதென்றும் குறைவதும் இல்லை


பல வருஷம் நீ எழுதி வந்தாலும்
சுவையொன்றும் குறையவில்லை
சொன்னால் கேள் தமிழ்மணம் தூரமில்லை (2)


பதிவு உலகிலே உன்னை வென்றிட யாரு...
கொங்கு நாட்டிலே உன்னை மிஞ்சிட யாரு...


பதிவு நாயகனே (2)
ப்ளாகரும் கண்டு வியக்கும்
இனி
வேர்ட் பிரஸ்சும்...
will call you back…


Come blog with me....
Come blog with me before you go…


செந்தமிழ் எழுதும் ஓரவதாரம்
வட்டார வழக்கில் நூறவதாரம்
பரம்பரை அறிவுடன் உழைப்பையும் கலந்து
பட்டையைக் கிளப்புகிறாய், எழுத்தாளர்
ஜே.மோ. வின் நட்பை அடைந்தாய்


சிப்பிக்கு உள்ளே முத்துக்கள் தூங்கும் உன்
ஒவ்வொரு வரியும் நகைச்சுவை ததும்பும்
புகைப்படம் எடுத்து பதிவினில் சேர்த்து
உன் முகம் அறியவைத்தாய்
பலநூறு
சொந்தங்கள் சேர்த்துவிட்டாய்


பதிவு உலகிலே உன்னை வென்றிட யாரு...
கொங்கு நாட்டிலே உன்னை மிஞ்சிட யாரு...


பதிவு நாயகனே (2)
ப்ளாகரும் கண்டு வியக்கும்
இனி
வேர்ட் பிரஸ்சும்...
will call you back…
பதிவு நாயகனே (4)


Come blog with me before you go…



தயவு செய்து யாரும் தப்பா நெனைக்காதிங்க. இது என்னைப் பாராட்டி நானே எழுதுன பாட்டு கிடையாது. நமக்கு ரொம்ப பிடிச்ச ஒருத்தர் ப்ளாக் எழுதுறாரு. சம்பந்தப்பட்ட பார்ட்டி நம்ம அனுமதி இல்லாமலே நம்ம மைண்ட் பூரா ஆக்கிரமிச்சுட்டாரு. அவருக்கு ஏதாவது கௌரவம் பண்ணனும்னு ரொம்ப நாளா தோணுச்சு. எழுதிட்டேன். இதுக்கு அவரு என்ன சொல்லப் போறாருன்னு தெரியலை. ரொம்ப கூச்சப்படுவாரு. அதப் பத்தி நமக்கு என்ன அக்கறை. நம்ம ஆள நாமதான கௌரவப்படுத்தனும். என்ன நான் சொல்றது சரியா? சரின்னா மறக்காம கருத்து சொல்லிட்டுப் போகனும். எங்கே சொல்லுங்க? (அடச் சீ, டிவி யில டோரா புஜ்ஜி பாத்து ரொம்ப கெட்டுப் போயிட்டேன்.)

கூடிய சீக்கிரம் ப்ளாகருக்குத் தாவிடலாம்னு இருக்கேன். என்னோட வேர்ட்பிரஸ் பதிவுகளை தமிழ்மணத்தில சேர்க்க ரொம்பவே திணற வேண்டியிருக்கு. அதனால அதே பேர்ல ப்ளாகர்லையும் ஆரம்பிச்சிருக்கேன். இதுவரைக்கும் அங்க எழுதுனதை மீள்பதிவா போட்டுக்கிட்டிருந்தேன். இனிமே இங்கேதான். முதல் பதிவுமுதல் மரியாதை. வரட்டுமா....

Saturday, June 28, 2008

தொடை

தொடை பதிவைப் படிக்க தொடுப்பைச் சொடுக்கவும்.

கொலை வெறிக் கவிதைகள் 1754 - 1

கொலை வெறிக் கவிதைகள் 1754-1 என்ற எனது கவிதையைப் படிக்க தொடுப்பைச் சொடுக்கவும்.

Wednesday, June 25, 2008

வணக்கம்

அனைவருக்கும் வணக்கம். சிலருடைய ப்ளாகுகளில் கூகிள் ஐ.டி. இல்லாமல் பின்னூட்டம் எழுத இயலவில்லை. அதனால் கூகிள் இல் இந்த ப்ளாகைத் தொடங்கியுள்ளேன்.

என்னுடைய எழுத்துக்களை வாசிக்க http://vijaygopalswami.wordpress.com என்ற தளத்துக்கு வருகை தாருங்கள். தங்களது மேலான பின்னூட்டங்களை வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றியுடன்

விஜய்கோபால்சாமி