Friday, September 26, 2008

போதும்டா சாமி அல்லது டேய் நாராயணா - 2

7:41 AM by விஜய்கோபால்சாமி ·
குறிச்சொற்கள் ,
1. அதிர்ச்சியான சம்பவமொன்றில் பறிபோன சுய நினைவு உருட்டுக் கட்டையால் அடித்த உடன் திரும்புவது...

2. கடப்பாறை வயிற்றில் இறங்கி முதுகு வழியாக வெளியே வந்த பிறகும் குத்துபட்ட ஹீரோ உயிர் பிழைத்து வருவது...

3. ஹீரோ மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட உடன் மக்கள் பக்கத்து மாநிலத்திலிருந்து கூட லாரி லாரியாகத் திரண்டு வருவது...

4. ஹீரோ நாற்பத்தைந்து வயதைத் தாண்டிய தோற்றத்துடன் இருந்தாலும் திருமணமாகாதவராகக் காட்டுவது...

5. ஹீரோ சொந்த ஊரிலிருந்து நகரத்துக்கு வரும்போது அங்கே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதும், அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஹீரோ முடிவெடுப்பதும்...

6. படம் வெளி மாநிலத்தில் நடந்தாலும் அந்த ஊர்க் கதாபாத்திரங்கள் கூட அட்சர சுத்தமாக தமிழ் பேசுவது (இரண்டொரு வார்த்தைகள் மட்டும் அந்த மாநில மொழியில்)...

7. ஆந்திராவில் நடக்கும் கதையில் தமிழ்க் குடும்பத்துப் பெண் கேரள பாணியில் சேலை கட்டியிருப்பது (எப்படி என்று விரிவாகச் சொன்னால் செருப்பும் துடைப்பமும் என் வீடு தேடி வரும், பரவாயில்லையா?)...

8. தாதா மகா மட்டமானவன் என்று காட்டுவதற்கு கோயில் ஆரத்தியில் சிகரெட் பற்றவைப்பது போல் கட்டுவது...

9. கோயிலில் சாமிக்கு உச்சக்கட்டத்தில் பூஜை நடக்கும்போது ஹீரோவுக்கு வெறி ஏறுவதும், ஹீரோ வில்லனைக் குத்திக் கொன்றதும் பாலபிஷேகம் செய்து அவரது உக்கிரத்தைத் தணிப்பதும்…

10. ஹீரோ கோவப்படும்போது மெட்ராஸ் ஐ வந்த மாதிரி கண் சிவப்பது…


இது அத்தனையும் இந்த ஞாயிறு (22-9-08) மாலை நான் பார்த்த ஒரே சினிமாவில் வந்த கேடு கெட்ட அபத்தங்கள். உக்காந்து பாத்த என்னை எதக் கொண்டு அடிக்கலாம்னு யோசிக்கிறீங்களா? யோசிங்க யோசிங்க… என்னது, படம் பேரு என்னன்னு சொல்லனுமா? அத என் வாயால சொல்ல மாட்டேன். படத்தப் பாத்துட்டு நான் மனசுல என்ன நெனச்சேன்னு வேணும்னா சொல்றேன். ”ஏண்டா யானைக்கு வைக்கிற பேர ஒரு கே*** வைச்சு அத சினிமாவா எடுத்துக் கொடுமைப் படுத்துறீங்க…”

1 மறுமொழிகள்:

மங்களூர் சிவா said...
September 26, 2008 at 9:38 PM

இனிய திருமண வாழ்த்துக்கள் விஜயகோபால்சாமி!

Post a Comment