Sunday, August 10, 2008

டேய் நாராயணா....

வீடு தேடி வந்து கொடுமைப் படுத்துறானுங்களேடா நாராயணா... ஏன்டா சன் டிவிக்கார புண்ணியவானுங்களா ஒங்க தொல்லைக்கு ஒரு அளவே இல்லையா... வியாழக் கெழம தானடா வீராசாமி படம் போட்டீங்க... அப்புறம் எதுக்குடா ஞாயித்துக் கெழம வாஞ்சிநாதன் போடுறீங்க... போடுறது தான் போடுறீங்க, பகல் நேரத்துல போடக் கூடாதாடா... ஏன்டா ராத்திரி நேரத்துல போட்டு சின்னப் புள்ளைங்கள பயமுறுத்துறீங்க...

நல்ல வேள நம்ம கேப்10 தமிழ்ப் படத்துல நடிக்கிறதோட நிறுத்திக்கிட்டாரு. அவரோட படத்த மத்த மொழிகள்ள டப்பிங் பண்றதோட நிறுத்திக்கிட்டாங்க. ரமணா மாதிரி முக்கியமான படங்கள அங்க உள்ள முக்கியஸ்தருங்கள வச்சு ரீமேக் பண்ணிடுறாங்க. யோசிச்சுப் பாருங்க, கேப்10ன வச்சு நேரடியா ஒரு தெலுங்கு படம் எடுத்தா எப்படி இருக்கும்?

”ரேய், ஆந்த்ராலொ மொத்தம் ரெண்டு லக்‌ஷம் பஸ்சுலு உன்னேயி. தாண்ட்லோ, டெப்பை ஐது வெய்யா நாலு ஒந்தா யாபை ஆறு (75,456) டவுன் பஸ்சுலு, முப்பை ஐது வெய்யா மூடு ஒந்தா இரவை எனிமிதி (35,328) டீலக்ஸ் பஸ்சுலு, பதஹாரு வெய்யா எனிமிதி ஒந்தா பத்னாலுகு (16,814 ஏசி வோல்வோ பஸ்சுலு....

அய்யய்யோ... கற்பன பண்ணவே பயமா இருக்கே...

கேப்10 கொடுமையாவது பரவாயில்லை, நம்ம லதிமுக தலைவரோட டார்ச்சரத் தான் தாங்க முடியல. எவனோ ஒருத்தன் ரோட்ல ஒன்னுக்கிருந்தான்னு அவன் டிக்கில நம்ம டி.ஆர் ஒன்னுக்கிருக்குறதும், ஃபுல் சூட்ல மும்தாஜ் கூட டான்ஸ் ஆடுறதும் தாங்க முடியலடா சாமி. ஆமா, இவருதான் ஹீரோயினிய தொடவே மாட்டாரே, அப்புறம் எதுக்கு இவரு மும்தாஜ் கூட ஆடனும், சரோஜா தேவி, பானுமதி மாதிரி சீனியர் நடிகைங்க போதாதா? இவரு கூட நடிக்க அவுங்களுக்கு இஷ்டமிருக்கோ இல்லையோ, யாரு கண்டா...

இவர வச்சு காவிரி பிரச்சனைலயும், முல்லைப் பெரியாறு விவகாரத்துலயும் நம்மள ஏச்சுக்கிட்டு இருக்கற பக்கத்து ஸ்டேட்காரனுங்கள பழிவாங்கலாம்னு பாத்தா அத்தன பேரும் வெவரமா எஸ்கேப் ஆயிடுறானுங்க. எவனும் இவரு படத்த டப்பிங்கும் பண்ண மாட்டேங்குறானுங்க ரீமேக்கும் பண்ண மாட்டேங்குறானுங்களே. யாம் பட்ட துன்பம் படுக பக்கத்து ஸ்டேட் படுபாவிகள்னு சந்தோஷப்படலாம்னு நெனச்சா நடக்காம போயிருச்சே...

ஆனா நம்ம டி.ஆர் மட்டும் ஆந்திரா பக்கம் வந்தா அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.

”நேனு தீஸ்கொஸ்தான்றா பண்டி
மீரு அந்தரு தாண்ட்லோ ரண்டி”

இது மாதிரி ஒரு பத்து இருவது ஐட்டத்த எடுத்து உட்டார்னா, பாலகிருஷ்னா, சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர். எல்லாம் வேற ஸ்டேட்டுக்கு டிக்கெட் எடுத்துருவாங்க.

ஆனா அதுல ஒரு கொடுமை என்னன்னா, அவரோட படம் பூரா ஹவுஸ்புல்லா ஓடும். ரஜினிகாந்து, கமலஹாசன் இவுங்கள மாதிரி துக்கடா ஏக்டருங்க படமெல்லாம் ரிலீஸ் பண்ண தியேட்டர் இல்லாம தெணறும்...

தயவு செஞ்சு இந்த தமிழகத்து விடிவெள்ளிய தமிழ்நாட்டுலயே வச்சுக்குங்கடா சாமிகளா... அப்புறம் கன்னடத்த செம்மொழி ஆக்க விடமாட்டேங்கறோம்னு சொல்லி பஸ்ஸ எரிச்சவனுங்க, நாம அவனுங்கள திட்டமிட்டுப் பழிவாங்குறோம்னு நெனச்சு தமிழ்நாட்டு மேல அனுகுண்டப் போட்டாலும் போட்ருவானுங்கடா. லூசுப் பசங்கடா அவனுங்க...

7 மறுமொழிகள்:

Anonymous said...
September 10, 2008 at 8:57 AM





சமீபத்துல எந்த படத்திலேயும் கேப்டன் இந்த மாதிரி புள்ளி விவரம் அடுக்கலைன்னு நினைக்கிறேன். ஒரு வேளை திருந்திட்டாரோ............

லதானந்த் said...
September 13, 2008 at 9:25 AM

என்னை மறந்திட்டியா?

விஜய்கோபால்சாமி said...
September 14, 2008 at 4:28 AM

மாமனை மறப்பேனா.... கல்யாண வேலையெல்லாம் முடிஞ்சு இப்போ தான் ஹைதராபாத் வந்தேன்

விஜய்கோபால்சாமி said...
September 14, 2008 at 4:29 AM

வாருங்கள் கடுகு அண்ணே,

இந்த வலைப்பதிவில் உங்களுடைய முதல் பின்னூட்டம் இது.

அவரு அப்படி எதுவும் பேசிரப் போறாரோங்கற பயத்துல எழுதுனது தான் இந்தப் பதிவு....

முரளிகண்ணன் said...
September 14, 2008 at 5:19 AM

:-))))))))))

Anonymous said...
September 14, 2008 at 5:33 AM

:)))
கேப்10 - இது சூப்பரு
இப்பல்லாம் கொலை வெறி கவிதைகள் எழுதுவதில்லையா?

கிரி said...
September 14, 2008 at 7:05 AM

ஹா ஹா ஹா செம காமெடி :-)))

Post a Comment