Saturday, July 5, 2008

உலக நாயகனே - லிரிக்ஸ் ரீமிக்ஸ்

Come blog with me before you go… (2)


பதிவு உலகிலே உன்னை வென்றிட யாரு...
கொங்கு நாட்டிலே உன்னை மிஞ்சிட யாரு... (2)


பதிவு நாயகனே (2)
ப்ளாகரும் கண்டு வியக்கும்
இனி
வேர்ட் பிரஸ்சும் உன்னை அழைக்கும்...


நீ ஒரு ரேஞ்சர், வம்புக்கு வந்தா டேஞ்சர்
நடுக்காட்டில் லேப்டாப்பில் பதிவெழுதும் ப்ளாகர் (2)


ஒரு ப்ளாக் தொடங்கி இரண்டே மாதத்தில்
ஆயிரம் மாப்பிள்ளை கண்டாய்
உன் ப்ளாகில்
ஆறாயிரம் ஹிட்டும் கண்டாய்


வேலைகள் உன்னை சூழ்ந்து நின்றாலும்
எழுதுவதென்றும் குறைவதும் இல்லை


பல வருஷம் நீ எழுதி வந்தாலும்
சுவையொன்றும் குறையவில்லை
சொன்னால் கேள் தமிழ்மணம் தூரமில்லை (2)


பதிவு உலகிலே உன்னை வென்றிட யாரு...
கொங்கு நாட்டிலே உன்னை மிஞ்சிட யாரு...


பதிவு நாயகனே (2)
ப்ளாகரும் கண்டு வியக்கும்
இனி
வேர்ட் பிரஸ்சும்...
will call you back…


Come blog with me....
Come blog with me before you go…


செந்தமிழ் எழுதும் ஓரவதாரம்
வட்டார வழக்கில் நூறவதாரம்
பரம்பரை அறிவுடன் உழைப்பையும் கலந்து
பட்டையைக் கிளப்புகிறாய், எழுத்தாளர்
ஜே.மோ. வின் நட்பை அடைந்தாய்


சிப்பிக்கு உள்ளே முத்துக்கள் தூங்கும் உன்
ஒவ்வொரு வரியும் நகைச்சுவை ததும்பும்
புகைப்படம் எடுத்து பதிவினில் சேர்த்து
உன் முகம் அறியவைத்தாய்
பலநூறு
சொந்தங்கள் சேர்த்துவிட்டாய்


பதிவு உலகிலே உன்னை வென்றிட யாரு...
கொங்கு நாட்டிலே உன்னை மிஞ்சிட யாரு...


பதிவு நாயகனே (2)
ப்ளாகரும் கண்டு வியக்கும்
இனி
வேர்ட் பிரஸ்சும்...
will call you back…
பதிவு நாயகனே (4)


Come blog with me before you go…



தயவு செய்து யாரும் தப்பா நெனைக்காதிங்க. இது என்னைப் பாராட்டி நானே எழுதுன பாட்டு கிடையாது. நமக்கு ரொம்ப பிடிச்ச ஒருத்தர் ப்ளாக் எழுதுறாரு. சம்பந்தப்பட்ட பார்ட்டி நம்ம அனுமதி இல்லாமலே நம்ம மைண்ட் பூரா ஆக்கிரமிச்சுட்டாரு. அவருக்கு ஏதாவது கௌரவம் பண்ணனும்னு ரொம்ப நாளா தோணுச்சு. எழுதிட்டேன். இதுக்கு அவரு என்ன சொல்லப் போறாருன்னு தெரியலை. ரொம்ப கூச்சப்படுவாரு. அதப் பத்தி நமக்கு என்ன அக்கறை. நம்ம ஆள நாமதான கௌரவப்படுத்தனும். என்ன நான் சொல்றது சரியா? சரின்னா மறக்காம கருத்து சொல்லிட்டுப் போகனும். எங்கே சொல்லுங்க? (அடச் சீ, டிவி யில டோரா புஜ்ஜி பாத்து ரொம்ப கெட்டுப் போயிட்டேன்.)

கூடிய சீக்கிரம் ப்ளாகருக்குத் தாவிடலாம்னு இருக்கேன். என்னோட வேர்ட்பிரஸ் பதிவுகளை தமிழ்மணத்தில சேர்க்க ரொம்பவே திணற வேண்டியிருக்கு. அதனால அதே பேர்ல ப்ளாகர்லையும் ஆரம்பிச்சிருக்கேன். இதுவரைக்கும் அங்க எழுதுனதை மீள்பதிவா போட்டுக்கிட்டிருந்தேன். இனிமே இங்கேதான். முதல் பதிவுமுதல் மரியாதை. வரட்டுமா....

9 மறுமொழிகள்:

VIKNESHWARAN said...
July 5, 2008 10:42 PM

சூப்பரா இருக்கு... வாழ்த்துக்கள்... பிளாகரில் கலக்குங்க...

வழிப்போக்கன் said...
July 6, 2008 1:10 AM

இத அங்க்கிள் படிச்சாரா ??

மொத்த பாட்டுக்கும் ஒரு ரிப்பிட்டேய்...

வழிப்போக்கன் said...
July 6, 2008 1:12 AM

//இதுக்கு அவரு என்ன சொல்லப் போறாருன்னு தெரியலை. ரொம்ப கூச்சப்படுவாரு. அதப் பத்தி நமக்கு என்ன அக்கறை. நம்ம ஆள நாமதான கௌரவப்படுத்தனும்.//

சரி..சரி..சரி..சரி..சரி..சரி..

// என்ன நான் சொல்றது சரியா?
சரின்னா மறக்காம கருத்து சொல்லிட்டுப் போகனும்///


சொல்லியாச்சு..சொல்லியாச்சு..

செந்தழல் ரவி said...
July 6, 2008 2:16 AM

அவரிடம் சொல்லி ஒரு ஆனைசவாரி ப்ரீயா வாங்கித்தரேன்...

cheena (சீனா) said...
July 7, 2008 3:51 AM

விஜய் கோபால்சாமி

நண்பர் லதானந்த் இப்பதிவினைப் படிக்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்தும், இதைப் படித்தேன். அருமையான ரீமிக்ஸ் பதிவு. அவருக்கேற்ற பதிவு. நல்வாழ்த்துகள்

வெயிலான் said...
July 7, 2008 6:15 AM

மாமனுக்கு மாப்பியின் மரியாதையா!

நல்லாருக்கு.

Boston Bala said...
July 7, 2008 8:51 AM

:))

SanJai said...
July 7, 2008 7:51 PM

:-))

பரிசல்காரன் said...
July 8, 2008 9:11 AM

பிளாக் உலகுக்கு வந்தனம்..

என்ன மொக்கை வேணாலும் போடுங்க.. தயாரா இருக்கோம்!

Post a Comment